AI ஆளுகை மசோதா தயார், 2027 தொடக்கத்தில் தாக்கல்: கோபிந்த்
உத்தேச AI ஆளுகை மசோதா நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 2027 தொடக்கத்துக்குள் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மக்களவையில் கூறினார். பெர்னாமா தகவலின்படி, AI அமைப்புகளை உருவாக்குவோர், வழங்குவோர், பயன்படுத்துவோர் இடர்களை அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மசோதா கோரும்.